
வாய்ப்பை மஹிந்தவின் சூழ்ச்சியால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இழந்துள்ளார் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
அலரிமாளிகையில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தெரிவிக்கையில், “எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் திட்டத்துக்கு அமைய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் அரங்கேற்றப்பட்ட சூழ்ச்சிகளே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையிலான முரண்பாடுகளுக்குக் காரணமாகும்.
ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் முரண்பாட்டை ஏற்படுத்தி, இரண்டாவது முறையாகவும் ஜனாதிபதியாகுவதற்கு இருந்த வாய்ப்பை தட்டிப் பறிப்பதற்கு சுதந்திரக் கட்சிக்குள் சூட்சுமமாக முன்னெடுக்கப்பட்ட சகல திட்டங்களும் இன்று வெற்றி கண்டுள்ளன. இதனால் மைத்திரிபால சிறிசேன தனக்கு கிடைத்த வாய்ப்பை இழந்துவிட்டார்” என்று தெரிவித்தார்.
இதேவேளை, அரசாங்கத்துக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை எக்காரணத்தை கொண்டும் அரசாங்கத்துக்கு சவாலாக அமையாது என அவர் மேலும் குறிப்பிட்டார்.
