
தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
புதிய அரசுக்கான வரவு செலவுத் திட்டத்தை இன்று (வெள்ளிக்கிழமை) மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருந்தார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, இம்முறை தயாரிக்கப்பட்டுள்ள வரவு செலவு திட்டத்தில், நாட்டின் முன்னேற்றத்திற்கு தேவையான அம்சங்கள் அடங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், புதிய இந்தியாவிற்கான இந்த வரவுசெலவு திட்டத்தில் வேளாண்மைத்துறையை மாற்றியமைப்பதற்கு தேவையான தொலைநோக்கு திட்டம் உள்ளதாகவும், குறிப்பிட்டுள்ளார்.
இதன்மூலம் ஏழைகள் பலமடையும் அதேவேளை இளைஞர்கள் பலன் பெறுவார்கள் என்றும் மோடி சுட்டிக்காட்டினார்.
பசுமையான சுற்றுச்சூழல் மற்றும் பசுமைசார்ந்த எரிசக்தி ஆகியவற்றுக்கான காரணிகள் இதில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் இந்த வரவு செலவு திட்டத்தின் மூலம் மத்தியதர வருமானம் கொண்ட பிரிவை சேர்ந்த மக்கள் முன்னேற்றமடையும் அதேவேளை, முன்னேற்றத்திற்கான பணிகள் வெகு விரைவில் செயற்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
