
மோதிக்கொண்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளனர்.
கனடாவின் டெலேட் சாலைக்கு அருகிலுள்ள ஓல்ட் ட்ரைவை அண்மித்த பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த விபத்தில் 23 வயதான இளம் பெண்ணொருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், குறித்த விபத்தில் படுகாயமடைந்த இருவர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
விபத்துக் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
