
கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த அண்ட்ரேயா பெனடெட்டோ (Andrea Benedetto) என்பவரின் அலறலைக் கேட்ட மெக்னினி உடனடியாக உதவிக்குச் சென்றார்.
பெனடெட்டோவின் தலை நீருக்குள் மூழ்காமல், உயிர்க்காப்பாளர்கள் வரும்வரை மெக்னினி அவரைக் கெட்டியாகப் பற்றிப் பிடித்துக்கொண்டார். மிதவையொன்றில் இருந்து நீருக்குள் வீழ்ந்த அவரால் கை, கால்களை அசைக்க முடியாத நிலையில் நீரில் தத்தளித்தார்.
இந்தநிலையில், நீரில் மூழ்கியவருக்கு அருகில் இருந்தமையால் உயிர்க்காப்பாளர்கள் வரும் முன்னர் மெக்னினி உதவிக்கு விரைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவம் இடம்பெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே அண்ட்ரேயா பெனடெட்டோ திருமணம் முடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, 2004 ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுகளின் போது அஞ்சல் நீச்சல் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற மெக்னினி, 2005 ஆம் ஆண்டிலும், 2007 ஆம் ஆண்டிலும் 100 மீட்டர் போட்டிகளில் உலகத் தர நிலையில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
