
இடம்பெற்ற மறுநாளே, புதிய பிரதமரையும் புதிய அமைச்சரவையும் நியமித்து சக்தி மிக்கதொரு அரசாங்கத்தை ஸ்தாபிப்போம் என ஒருங்கிணைந்த எதிரணி நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.
கண்டியில் இன்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘நவம்பர் 23 ஆம் திகதிக்கு முன்னர் நாட்டில் ஜனாதிபதித் தேர்தலொன்றை நடத்த வேண்டும். அந்த ஜனாதிபதித் தேர்தல் ஊடாக சக்தி மிக்கதொரு ஜனாதிபதியொருவர் நியமிக்கப்படுவார்.
அதற்கு அடுத்த நாளே நாம் புதிய பிரதமருடனும், புதிய அமைச்சரவையுடனும் சக்தி மிக்கதொரு அரசாங்கத்தை ஸ்தாபிப்போம். எனவே, டிசம்பர் மாதத்தில் இலங்கையில் மீண்டும் சக்தி பலமானதொரு அரசாங்கம் ஸ்தாபிக்கப்படும் என்பதை நான் உறுதியுடன் இங்குக் கூறிக்கொள்கிறேன்.
இன்று 19 ஆவது திருத்தச்சட்டத்தால் ஒட்டுமொத்த நாடே பலவீனமடைந்துள்ளது. இதனை பெருமையுடன் கொண்டுவந்து நிறைவேற்றிய ஜனாதிபதியே, இன்று இதனை இல்லாதொழிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
உண்மையில், இந்த திருத்தத்தால் நாட்டின் நிர்வாகமே ஒட்டுமொத்தமாக சீர்க்குலைந்துள்ளது. நாட்டின் தலைவருக்கு ஸ்தீரமான முடிவொன்றை எடுக்க முடியாத நிலைமை காணப்படுகிறது.
இவ்வாறான பிரச்சினைக்குரிய அரசியலமைப்பில் தான் நாம் இன்றும் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்’ என தெரிவித்துள்ளார்.
