(பி.எம்.எம்.ஏ.காதர்,ஏ.எல்.எம்.ஷினாஸ்;;)
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மருதமுனை கிளையின் ஏற்பாட்டில் கல்முனை பீபிள்ஸ் லீஸிங் அல்-சபா நிறுவனத்தினால் மருதமுனை பிரதேச மக்களுக்கு நீண்ட காலத்தேவையாக இருந்து வந்த ஜனாஸா வாகனம் கையளித்த நிகழ்வு ஜம்இய்யத்துல் உலமா மருதமுனை கிளையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.ஹ_சைணுதீன் தலைமையில் மருதமுனை கலாச்சார மத்திய நிலைய மண்டபத்தில் சனிக்கிழமை(13-07-2019)நடைபெற்றது.
இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட கல்முனை பீபிள்ஸ் லீஸிங் அல்-சபா நிறுவனத்தின் முகாமையாளர் எம்.ஐ.எம்.பைசால் நிறுவனத்தின் நிதியுடன் தனது சொந்த நிதியையும் சேர்த்து சுமார் நாற்பது இலட்சம் ரூபா பெறுமதியான ஜனாஸா வாகனத்தையும் அதன் ஆவனங்களையும் ஜம்இய்யத்துல் உலமா மருதமுனை கிளையின் பிரதிநிதிகளிடம் கையளித்தார்.
இந்த நிகழ்வில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மருதமுனை கிளையின் பிரதிநிதிகளும்,மருதமுனை மிமா சமூக சேவை அமைப்பின் பிரதிநிதிகளும்,ஜனாஸா நலன்புரிச் சங்க பிரதிநிதிகளும்,பள்ளிவாசல்களின் தலைவர்களும், ஊர்ப் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.