துணை ராணுவப் படையுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் வடஅயர்லாந்தில் வசிக்கும் பெண் ஒருவரின் 3.2 மில்லியன் பவுன்ஸ் மதிப்புள்ள சொத்துக்களை தேசிய குற்றவியல் அமைப்பு (NCA) முடக்கியுள்ளது.விசாரணையின் அடிப்படையில் குற்றம்சாட்டப்பட்டவரின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. நான்கு சொத்துக்கள் லண்டனிலும், இரண்டு சொத்துக்கள் வடக்கு அயர்லாந்திலும் உள்ளன.
விசாரணையின்போது சொத்துக்களை வாங்குவதற்கு அவருக்கு எவ்வாறு நிதி கிடைத்தது என்பதை அவர் விளக்க வேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளார்.
மேலும் குற்றம்சாட்டப்பட்டவர் சிகரெட் கடத்தலில் ஈடுபட்ட நபர்களுடனும் தொடர்புடையவர் என்றும் தேசிய குற்றவியல் அமைப்பு கருதுகிறது.
விசாரணை நடைபெறும்போது சந்தேகநபர் சொத்துக்களை விற்கவோ, கைமாற்றவோ முடியாது என்றும் தேசிய குற்றவியல் அமைப்பு தெரிவித்துள்ளது.





