அணுசக்தி ஒப்பந்தத்தின் கீழ் தனது முழு உரிமைகளையும் அடையும்வரை தமது முடிவை மாற்றப் போவதில்லை என ஈரான் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
அணுசக்தி ஒப்பந்தத்தால் அனுமதிக்கப்பட்டதைத் தாண்டி யுரேனியத்தை செறிவூட்டும் அளவை உயர்த்துவதற்கான முடிவை மாற்றுமாறு ஐரோப்பிய ஒன்றியம் ஈரானை வலியுறுத்தியுள்ளது.
சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரியும் ஈரானின் உச்ச தலைவரின் பிரதிநிதியுமான அலி ஷம்கானி, பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனால் தெஹ்ரானுக்கு அனுப்பப்பட்ட சிரேஷ்ட பிரெஞ்சு தூதரை சந்தித்தபோது ஈரானின் நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார்.
அணுசக்தி ஒப்பந்தத்தின் தமது பங்கை செயற்படுத்துவதற்கும் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளிலிருந்து ஈரானை பாதுகாப்பதற்கும் ஐரோப்பிய நாடுகள் தவறி விட்டதாக ஈரான் குற்றஞ்சாட்டியுள்ளது.
