
கர்நாடக மாநிலத்தில் ஆட்சிக்கு ஆதரவாக இருந்த 14 சட்டமன்ற உறுப்பினர்களும் இராஜினாமா செய்தமையினால், குமாரசாமி தலைமையிலான அரசு கவிழும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
மேலும் இராஜினாமா செய்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி காங்கிரஸ் சார்பில் கடிதமொன்று கையளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே இவ்விடயம் குறித்து ரமேஷ் குமார் இன்று தெரிவித்துள்ளதாவது, “இராஜினாமா செய்த 14 சட்டமன்ற உறுப்பினர்களில் 8 பேரின் கடிதங்கள் சட்டத்துக்கு உட்பட்டவையாக இருக்கவில்லை.
அத்துடன் குறித்த சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் இதுவரை என்னை நேரில் சந்தித்து ராஜினாமாவை சமர்ப்பிக்கவில்லை.
மேலும் என்னை வந்து சந்திக்குமாறு அவர்களுக்கு அவகாசமும் வழங்கியுள்ளேன்” என ரமேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
