
மேலும், மாண்டியாவில் உள்ள விவசாயிகளுக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். ஜூன் மற்றும் ஜூலை மாதத்திற்கான நீரை தமிழகத்திற்கு திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
காவிரியில் ஜூன் மாதம் தமிழகத்திற்கு திறக்க வேண்டிய 9.19 டி.எம்.சி தண்ணீரை உடனடியாக திறக்குமாறு கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுருந்தது.
அதன்படி தற்போது தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்து விட குமாரசாமி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் போதிய மழை இல்லாத காரணத்தினால் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நிலத்தடி நீர் மட்டம் குறைந்திருப்பதால் மக்கள் மழையை எதிர்பார்த்துள்ளனர். இதற்கிடையே காவிரியில் இருந்து கர்நாடகம் தண்ணீரை திறந்து விட்டால் பற்றாக்குறை பிரச்னை ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டுவர வாய்ப்புள்ளது.
அதேநேரத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்துவருவதால் கர்நாடகா அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது.
இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை காணப்படுவதால் தண்ணீரை திறக்கும் முடிவுக்கு கர்நாடகம் அரசு முன்வந்துள்ளது. இதற்கு முதல்வர் குமாரசாமியும் அனுமதி வழங்கியுள்ளார்.
