(ஜெ.ஜெய்ஷிகன்)
வாழைச்சேனை இந்துக்கல்லூரி மாணவர்களில் ‘கோல்டன் 91’ பிரிவு மாணவர்களால் இரண்டு இலட்சம் ரூபா செலவில் கரப்பந்தாட்ட மைதான புனரமைப்பு மற்றும் உபகரணங்கள் சம்பிரதாயபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு கடந்த 10.07.2019ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது.
கல்லூரியின் முதல்வர் அ.nஐயஐPவன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கோறளைப்பற்றுக் கோட்டக் கல்விப் பணிப்பாளர் நா.குணலிங்கம், பிரதி அதிபர்கள், பொறுப்பு ஆசிரியர் எஸ்.அல்பிரின் இயேசு சகாயம், ஆசிரியர்கள், பயிற்றுவிப்பார்கள், கல்வி சாரா ஊழியர்கள், கல்லூரியின் பழைய மாணவர்களான 2007 க.பொ.த சாதாரண தர மாணவர்கள் மற்றும் 2010 க.பொ.த உயர்தர மாணவர்களும் இணைந்தே இரண்டு இலட்சம் ரூபாவிற்கு மேற்பட்ட செலவில் கரப்பந்தாட்ட மைதானங்கள் இரண்டை புனரமைத்துக் கொடுத்ததுடன் விளையாட்டு உபகரணங்களையும் வழங்கி மாணவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வாழைச்சேனை இந்துக்கல்லூரியின் 90வது வருட நிறைவு விழாவை சிறப்பிக்கும் வகையிலான முதலாவது வெற்றிகரமான செயற்றிட்டமாக குறித்த செயற்றிட்டம் அமைந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. இம் மாணவர்களின் செயற்பாடு ஏனைய மாணவர்களுக்கு முன்னுதாரணமாக அமைவதாக நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் சிலாகித்துப் பேசியதும் குறிப்பிடத் தக்கது.
