
கனடாவிலிருந்து அவுஸ்ரேலியாவின் சிட்னி நோக்கி சென்றுகொண்டிருந்த விமானம் மீது நடுவானில் மின்னல் தாக்கியதை அடுத்தே குறித்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
ஏர் கனடா 33 ரக விமானம் 269 பயணிகள் மற்றும் 15 விமான பணியாளர்களுடன், நள்ளிரவு 12.33 மணிக்கு வான்கூவரில் இருந்து அவுஸ்ரேலியாவின் சிட்னி நோக்கி புறப்பட்டுள்ளது.
ஹொனலுலுவிலிருந்து தென்மேற்கே 600 மைல் தொலைவில் 36,000 அடி உயரத்தில் விமானம் பறந்துகொண்டிருந்த போது திடீரென மின்னல் தாக்கியுள்ளது.
இதனைத் தொடர்ந்து வேகமாக திருப்பப்பட்ட விமானம், அமெரிக்காவின் ஹவாயில் அதிகாலை 6.45 மணியளவில் தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது.
இதன்போது 35 பேர் காயமடைந்துள்ளதாகவும், காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
