LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Saturday, July 13, 2019

சோபா ஒப்பந்தம் குறித்த இலங்கையின் அச்சம் – அமெரிக்கா மறுப்பு

அமெரிக்காவுடனான உத்தேச படைகளின்
அந்தஸ்து ஒப்பந்தம் (சோபா) இலங்கையில் வெளிநாட்டு படைத்தளமொன்றிக்கு வழிவகுக்கும் நிலை காணப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

இந்நிலையில் அமெரிக்கத் தளமொன்றை நிறுவும் எவ்விதமான நோக்கமும் கிடையாது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

மாறாக இலங்கையுடன் மேற்கொள்ளப்படும் இரு தரப்பு ஒப்பந்தங்கள் இந்த நாட்டின் இறையாண்மைக்கு முழுமையாக மதிப்பளிக்கும் வகையிலேயே காணப்படும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவுடனான உத்தேச படைகளின் அந்தஸ்து ஒப்பந்தம் குறித்து பல்வேறு சர்ச்சைக்குறிய கருத்துக்கள் மேலோங்கியுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதேவேளை, நாட்டின் இறையாண்மையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் மீறுகின்ற எதையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது எனவும், அவ்வாறான ஒப்பந்தங்களில் கைச்சாத்திடாது எனவும் இலங்கை அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7