
வாழும் மருத்துவர்கள் வடக்கு மாகாணத்திற்கு வந்து மருத்துவச் சேவை செய்ய விரும்பினால் 6 மாத இலவச வீசா மற்றும் தங்குமிடம் போன்ற ஒழுங்குகளைச் செய்து தருவதாக வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவனுக்கும் சற்ரன் நகரசபை உறுப்பினர் பரம் நந்தாவுக்கும் இடையிலான சந்திப்பின்போதே இந்த விடயத்தை வடமாகாண ஆளுநர் தெரியப்படுத்தியுள்ளார்.
இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்து 10 வருடங்கள் ஆகியுள்ளபோதிலும் வடக்கில் மருத்துவத்துறை பின்தங்கிய நிலையிலேயே உள்ளது.
எனவே நலிந்துபோயுள்ள மக்களுக்கு உதவும் நோக்கில் தாம் இந்தத் திட்டத்தினை முன்னெடுத்துள்ளதாக சுரேன் ராகவன் கூறியுள்ளார்.
சுரேன் ராகவனுடன் பரம் நந்தா மேற்கொண்ட இந்தச் சந்திப்பில் வடமாகாண ஆளுநரின் முன்னாள் செயலாளரும் தற்போதைய வடமாகாண கல்வியமைச்சின் செயலாளருமான L.இளங்கோவன் அவர்களும் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
