
பிரதானியாக என்பு முறிவு சத்திரச்சிகிச்சை நிபுணர் கோபி சங்கர் மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனத்தை ஆளுநர் செயலகத்தில் வைத்து இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை கோபி சங்கர் பெற்றுக்கொண்டார்.
வடமாகாணத்தில் இடம்பெறும் வீதி விபத்துக்களால் மக்கள் அதிகளவில் உயிரிழப்புக்கள், உடல் அவயவங்கள் மற்றும் சொத்திழப்புக்களுக்கும் முகம்கொடுத்து வருகின்றனர்.
இதன் காரணமாக இதனைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் இந்த வீதிப் பாதுகாப்புச் சபை செயற்படும் என்று வடக்கு மாகாண ஆளுநரின் ஊடகப் பிரிவின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
