
பண்டக்காவி கப்பல் ஒன்று கனடாவைச் சென்றடைந்துள்ளது.
கனடாவிலிருந்து சேகரிக்கப்பட்ட கழிவுப் பொருட்களைக் கொண்ட 69 கொள்கலன்கள் அந்தக் கப்பலில் ஏற்றிச் செல்லப்பட்டன.
பிலிப்பீன்ஸிற்கு அனுப்பி வைக்கப்பட்ட அந்தக் கப்பலை, பிலிப்பீன்ஸ் நிராகரித்ததை அடுத்து, அது கனடாவிற்கே திருப்பி அனுப்பப்பட்டது.
உலகின் குப்பைக்கூளமாக, ஆசிய நாடுகள் திகழமாட்டாது என்ற எண்ணம் வலுப்பெற்று வருவதை இந்தச் சம்பவம் குறிக்கின்றது.
கனடா, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தங்களின் இலத்திரனியல் கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் அரைகுறை பாவனை கொண்ட பொருட்களை இவ்வாறு கொள்கலன்கள் ஊடாக ஆசிய நாடுகளுக்கு அனுப்பி வைக்கின்றன.
இதேபோன்ற பிரச்சினை மலேசிய மற்றும் இந்தோனேஷிய நாடுகளிலும் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
