
அமைக்க ரூ.400 கோடி, 2019 – 2020இற்கான நிதியாண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது கடந்த ஆண்டு கல்வித் துறைக்காக ஒதுக்கப்பட்ட தொகையைவிட மூன்று மடங்கு அதிகமாகும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்தார்.
மக்களவையில் 2019-2020 ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்து உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
உலகளவில் சிறந்த கல்வி முறைகளில் ஒன்றாக இந்தியாவின் உயர் கல்வி முறை அமையும் வகையில் புதிய தேசிய கல்விக் கொள்கையை அரசு அமைக்கும் என அவர் உறுதியளித்தார்.
அத்துடன், புதிய பள்ளி மற்றும் உயர் கல்வியில் மாற்றம் கொண்டு வருவதால், அரசின் ஆளுமைத்திறன் மேம்பட்டு, ஆய்வு மற்றும் புதிய கண்டுபிடிப்புகளில் கவனம் அதிகரிக்கும்.
ஆய்வு மற்றும் கண்டுபிடிப்புகளை குறிக்கோளாகக் கொண்டு, நாட்டில் ஆய்வுக்கான நிதி, ஒத்துழைப்பு மற்றும் ஊக்குவிப்புக்காக நிதி அமைச்சர் தேசிய ஆய்வு நிறுவனம் அமைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், உயர் கல்வி நிறுவனங்களில் வெளிநாட்டு மாணவர்கள் பயில்வதற்கு ‘இந்தியாவில் கல்வி கற்போம்’ (Study in India) என்ற திட்டத்தை நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
அத்துடன் இந்திய உயர் கல்வி ஆணையத்தை அமைப்பதற்கான சட்ட முன்வரைவு வரும் ஆண்டு சமர்பிக்கப்படும் என்றும் கூறினார்.
தேவையான அனைத்து நிதி உதவிகளையும் அளிக்கும் வகையில் ‘விளையாட்டு இந்தியா’ திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என்றும், இத்திட்டத்தின் கீழ் எல்லா அளவிலும் விளையாட்டுகளை பிரபலப்படுத்த விளையாட்டு வீரர்களின் மேம்பாட்டிற்கான தேசிய விளையாட்டு கல்வி வாரியம் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
மேலும், உலகின் சிறந்த 200 பல்கலைக்கழக பட்டியலில், இரண்டு இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களும் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனமும் இடம்பிடித்துள்ளன என்று அமைச்சர் நிர்மலா சீதாராமன் எடுத்துக்கூறினார்.
