
கடந்த 25 ஆம் திகதி வியாழக்கிழமை வெப்பநிலை 38.7C (101.7F) கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக தாவரவியல் பூங்காவில் பதிவாகியுள்ளது.
இது இங்கிலாந்து வரலாற்றில் 2003 இல் கென்ற்றில் பதிவான 38.5C (101.3F) வெப்பநிலையை முறியடித்துள்ளது.
26 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வானிலை அலுவலகத்தால் வெளியிடப்பட்ட தற்காலிக புள்ளிவிவரத்தின்படி கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக தாவரவியல் பூங்காவில் வெப்பநிலை 38.7C எனப் பதிவாகியுள்ளது.
அந்த வெப்பநிலை பதிவு இன்று திங்கட்கிழமை புதிய பதிவைச் சரிபார்க்க அனுப்பப்பட்ட வானிலை அலுவலக அதிகாரியால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
தாவரவியல் பூங்காவில் பணிபுரியும் ஊழியர்கள் “நாங்கள் அனைவரும் வெப்பத்தில் உருகுவதைப் போல உணர்ந்தோம்” என கடந்த வியாழக்கிழமை சமூக வலைத் தளங்களில்
பதிவிட்டிருந்தனர்.
1904 ஆம் ஆண்டு முதல் கேம்பிரிட்ஜ் நகரின் தென்பகுதியில் வானிலை நிலையத்தால் தினசரி வெப்பநிலை அளவிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
