
விருப்பின்படி எந்தவொரு சூழ்நிலையிலும் அரசியலமைப்பின் 19 வது திருத்தம் இரத்து செய்யப்படாது என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.
அலரிமாளிகையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், 19 ஆவது அரசியல் சீர்திருத்தங்களை திரும்பப் பெற அரசாங்கம் தயாராக இல்லை என கூறினார்.
இந்த நாட்டின் தலைவர் அமைச்சரவை மற்றும் பிரதமருக்கு ஆதரவாக இல்லை. எனவே ஜனாதிபதி எப்படியாவது இந்த அரசாங்கத்தை கவிழ்க்க விரும்புகிறார் என்றும் குற்றம் சாட்டினார்.
மேலும் பலரால் வாக்குறுதியளிக்கப்பட்ட 19 வது திருத்தம் தற்போதைய அரசாங்கத்தால் நனவாக்கப்பட்டது. எனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சுயநல தேவைகளை நிறைவேற்றுவதற்கு நாம் உடன்படப்போவதில்லை என கூறினார்.
