
உள்ளிட்ட 11 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யக்கோரும் வழக்கு விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுமென உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கும் இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டுமென தி.மு.க.வின் தங்க தமிழ்ச்செல்வன் உச்ச நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
குறித்த மனு மீதான வழக்கின் விசாரணை, இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
மேலும் இந்த வழக்கை விசாரிக்க புதிய அமர்வு அமைக்கப்படும் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது
ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் அணிகள் தனியாக இருந்தபோது, எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம், செம்மலை, நடராஜ் உள்ளிட்ட 11 சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
அதனைத் தொடர்ந்து இவ்வாறு வாக்களித்த 11 சட்டமன்ற உறுப்பினர்களையும் தகுதி நீக்கம் செய்ய வலியுறுத்தி தி.மு.க கொறடா சக்கரபாணி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
ஆனால் அவ்வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தமையினால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இதன்போது வழக்கை விசாரித்து வந்த நீதிபதி ஏ.கே.சிக்ரி பணி ஓய்வு பெற்றதால் அவ்வழக்கு நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வந்தது. இந்நிலையிலேயே வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டுமென தி.மு.க.வின் தங்க தமிழ்ச்செல்வன் உச்சநீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
