
னை பதுபொல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றுள்ளது.
நீர்கொழும்பில் இருந்து ஹற்றன் நோக்கிப் பயணித்த அரச பேருந்துடன் மோட்டர் சைக்கிள் மோதுண்டதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது, கினிகத்தேனை பிரதேசத்தில் இருந்து ரஞ்ஜுராவ நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் பேருந்துடன் மோதி பின்பக்க சில்லில் சிக்கியுள்ளார்.
இதனால் படுகாயமடைந்த அவர் நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
கினிகத்தேனை அம்பகமுவ பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய சந்துன் மதுரங்க என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, இவ்விபத்து தொடர்பாக பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதேவேளை, மேற்படி விபத்து அருகில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமெராவில் பதிவாகியுள்ளது.
