
ட்ட 19ஆவது திருத்தமே இன்று பல பிரச்சினைகளைத் தோற்றுவித்துள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த திருத்தச் சட்டம் தம்மை பழிவாங்கும் நோக்கில் தூரநோக்கமற்ற விதத்தில் உருவாக்கப்பட்டது எனவும் அவ்ர குறிப்பிட்டுள்ளார்.
தங்காலை கோல்டன் இல்லத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தெரிவிக்கையில், “அரசாங்கத்தின் இடைப்பட்ட பதவிக் காலத்தில் ஜனாதிபதியும், பிரதமரும் மக்களை பாதிக்காத வகையில் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.
ஆனால், அரசாங்கத்தின் தான்தோன்றித்தனமான செயற்பாட்டின் காரணமாக ஜனாதிபதி தனது நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி அமைச்சரவையினை கூட்டவில்லை. இதற்கு 19ஆவது அரசியலமைப்பின் ஊடாகவே வழிமுறைகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
எம்மை பழிவாங்கும் நோக்கத்தில் தூரநோக்கற்ற அரசியல் செயற்பாடுகள் மற்றும் ஏற்படும் எதிர்விளைவுகள் குறித்து ஆராயாமல் அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் கொண்டு வரப்பட்டது.
கடந்த காலங்களில் ஏற்பட்ட பல பிரச்சினைகளுக்கு இத்திருத்தமே பிரதான காரணம். நிறைவேற்று துறைக்கும், சட்டவாக்க துறைக்கும் இன்று அதிகாரம் தொடர்பான முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.
தேர்தலின் ஊடாகவே ஆட்சி மாற்றம் ஏற்படும். இடம்பெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலைத் தொடர்ந்து காலம் தாழ்த்தப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலே இடம்பெற்றிருக்க வேண்டும்.
ஆனால் மாகாண சபை தேர்தலை நடத்தாமல் இருப்பது பாரிய ஜனநாயக உரிமை மீறலாகும். இடம்பெறவுள்ள அனைத்துத் தேர்லையும் எதிர்கொள்ள நாம் தயாராகவே உள்ளோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.
