LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Saturday, June 15, 2019

மட்டக்களப்பில் உலக யுத்தக் கப்பலின் பாகங்களை கழற்றிய வெளிநாட்டவர்கள் கைது!

மட்டக்களப்பு கல்லடி கடற்பகுதியில் 2ஆம்
உலக யுத்தத்தில் தாண்டிருந்த கப்பலின் பாகங்களை கழற்றிய வெளிநாட்டவர்கள் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்களை நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு கடற்படையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கப்பல் பாகங்கள் மற்றும் பிக்கப் ரக வாகனம் ஒன்று உட்பட கடலில் சுழியோட பயன்படுத்திய உபகரணங்களையும் கைப்பற்றியதுடன் அவற்றை தம்மிடம் ஒப்படைத்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

கடற்படையினருக்குக் கிடைத்த தகவல் ஒன்றினையடுத்தே கல்லடியில் உள்ள உல்லாசப் பயணிகள் விடுதியில் தங்கியிருந்த குறித்த வெளிநாட்டு பிரைஜகள் கைதுசெய்யப்பட்டனர்.

இவர்களிடம் இருந்து கடலில் தாண்ட யுத்த கப்பலின் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான கப்பலின் எஞ்சின் பகுதியின் பாகங்கள் மற்றும் இதனைக் கழற்றுவதற்காக சுழியோடி பயன்படுத்தும் ஓட்சிசன் சிலின்டர்கள் நீச்சல் உடைகள் உட்பட பல உபகரணங்கள் கைப்பற்றப்பட்டன.

இதில் கைது செய்யப்பட்ட ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த தந்தை, மகன் மற்றும் ஒஸ்ரியாவைச் சேர்ந்தவர் உட்பட மூவர் சுற்றுலா விசாவில் இலைங்கைக்கு வந்து நீர் கொழும்பு ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளனர். அவர்கள் பிக்கப் ரக வாகனம் ஒன்றில் மட்டக்களப்பு கல்லடிப் பகுதியில் வந்து தங்கி இந்த சட்டவிரோதமான செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, கடந்த 7 வருடங்களாக விடுமுறையில் இங்கு வந்து இக்கப்பல் தொடர்பாக நீரில் மூழ்கி அவதானித்து வந்தாகவும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7