
மறுதினம் (திங்கட்கிழமை) விண்வௌியில் நிலைநிறுத்தப்படவுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் விண்ணில் செலுத்தப்பட்ட ‘ராவணா-1’ செய்மதியே இவ்வாறு நிலைநிறுத்தப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வௌியிட்டுள்ளது.
புவியில் இருந்து 400 கிலோமீற்றர் தொலைவில் உள்ள விண்வௌி பாதையில் குறித்த செய்மதி இலங்கை நேரப்படி பிற்பகல் 3 மணியளவில் நிலைநிறுத்தப்படவுள்ளது.
மொரட்டுவையில் உள்ள ஆதர் சீ.கிளார்க் மத்திய நிலையத்தை சேர்ந்த தரிண்டு தயாரத்ன மற்றும் டுலானி சமிக்க ஆகிய தொழினுட்பவியலாளர்கள், ஜப்பானில் உள்ள Kyushu தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து இந்த செய்மதியை வடிவமைத்துள்ளனர்.
ஜப்பானின் தொழில்நுட்ப உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட குறித்த செய்மதிக்கு ராவணா-1 என பெயரிடப்பட்டது.
1.05 கிலோகிராம் எடைகொண்ட இந்த செய்மதி 11.3cm நீளத்தையும் 10cm உயரம் மற்றும் 10cm அகலத்தையும் கொண்டுள்ளது. அத்துடன் இதன் குறைந்தபட்ச ஆயுட்காலம் ஒன்றரை ஆண்டுகளாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
