
எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பயங்கரவாத விசாரணைப் பிரிவில் இன்று (சனிக்கிழமை) வாக்குமூலம் அளித்துள்ளார்.
பயங்கரவாத விசாரணைப் பிரிவில் இன்று காலை முன்னிலையான ஹிஸ்புல்லாஹ்விடம் சுமார் எட்டு மணிநேரத்திற்கு மேலாக விசாரணை இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில், இலங்கை நேரப்படி முற்பகல் 9.45 அளவில் விசாரணைக்கு முகங்கொடுத்த அவர் மாலை 5.45 அளவில் வௌியேறியுள்ளார்.
பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் குறித்து அவர் மீது தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் இந்த விசாரணை இடம்பெற்றுள்ளது.
கடந்த ஏப்ரல் 22ஆம் திகதி இரவு ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த சந்தர்ப்பத்தில் கல்குடா பகுதியில் உள்ள விருந்தகத்தில் சந்தேகத்திற்கிடமாக அரேபிய நாட்டவர்கள் இருவருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டதாக ஹிஸ்புல்லாஹ் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக குற்றவிசாரணைப் பிரிவினரால் ஆரம்பிக்கப்பட்ட விசாரணைக்கு அமைவாக அவர் தன்னிலை விளக்கத்தை அளித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
