
பணிகள் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படவுள்ளன.
போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் அசோக் அபேசிங்க நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நாடாளுன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது, “பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் அடுத்த மாதம் 5 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன.
இந்த நிர்மாணப் பணிகள் இரண்டு அல்லது மூன்று மாத காலத்திற்குள் பூர்த்தி செய்யப்படும்” என்று பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
