
குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் நால்வர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
தீவகம், நெடுந்தீவு பகுதியில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் குறித்த மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
கைதானவர்கள் இராமேஸ்வரம் மற்றும் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 44 வயது முதல் 54 வயது வரையானவர்கள் என யாழ்ப்பாண நீரியல் வள திணைக்கள அதிகாரி தெரிவித்தார்.
குறித்த நால்வரையும் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
