கொலைச் சம்பவங்கள் தொடர்பாக வின்னிபெக் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த இரண்டு கொலைச் சம்பவங்களும் கனடாவின் போர்ரேஜ் அவெனியூ மற்றும் ஸ்பென்ஸ் ஸ்ட்ரீட் பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றுள்ளன. இந்த சம்பவங்களின் போது காயமடைந்த இரண்டு பேர் வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு சம்பவம் நேற்று அதிகாலை 3:45 மணியவில் இடம்பெற்ற நிலையில் கத்தி குத்தில் காயமடைந்த ஒருவர் தீவிர சிகிக்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து, லாங்க்சைட் தெருவின் 400 வது தொகுதியில் அதிகாலை 4:45 மணியவில் இடம்பெற்ற பிறிதொரு கொலைச் சம்பவத்தின் போது கத்தி குத்துக்கு இலக்காகி காயமடைந்த நபர் சிறிய காயங்களுடன் உள்ளார்.
இந்தநிலையில், உயிரிழந்தவர்கள் தொடர்பாகவும், காயமடைந்தவர்கள் தொடர்பாகவும் வின்னிபெக் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பில் தகவல் தெரிந்த பொதுமக்கள் உடனடியாக 204-986-6219 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.






