வான் ஒன்று லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 13 பேர் உயிரிழந்தனர்.
பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள கவுட்டாவிலிருந்து சென்ற வான் லொறியுடன் நேருக்கு நேர் மோதியதாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இதில் குழந்தைகளும், பெண்களும் உள்ளடங்குகின்றனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளாகவே வீதி விபத்துகள் அதிகரித்து வருகின்றன. இதற்கு மோசமான வீதிகளும், சாரதிகளின் பொறுப்பின்மையுமே காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.






