
மேற்குறிப்பிட்ட பாடசாலை மாணவி ஒருவர் அதே பாடசாலையின் ஆசிரியரினால் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக, குறித்த மாணவியின் பெற்றோர் அதிபருக்கு முறையிட்டும், அதிபர் பொலிஸாருக்கு இதுகுறித்து அறிவிக்காமல் சம்பவத்தினை மூடிமறைக்க முயற்சித்தாரென குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
ஆளுநரின் விசேட செயலணியின் ஆரம்ப விசாரணையில் இது தெரிய வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டு பாடசாலையின் அதிபரை உடன் அமுலுக்கு வரும் வகையில் தற்காலிக இடைநிறுத்தம் செய்வதற்கு ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்.
இது குறித்து உடனடியாக விசாரணை மேற்கொண்டு ஆளுநருக்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்கு விசாரணைக் குழுவொன்றினையும் நியமிக்குமாறு அவர் பணிப்புரை விடுத்துள்ளார்.
இதேவேளை, துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக குறிப்பிடப்படும் குறித்த ஆசிரியரும் விசாரணைகள் முடியும்வரை சேவையிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறான சம்பவங்கள் வடக்கு மாகாணத்தில் இடம்பெறுவதற்கு ஒருபோதும் இடமளிக்கமுடியாது எனக் குறிப்பிட்ட ஆளுநர், இவ்வாறு மோசமாக நடந்து கொள்பவர்களின் குற்றங்கள் நிரூபிக்கப்படும் சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு நீதித்துறையினூடாக அதியுச்ச தண்டனை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் குறிப்பிட்டார். அத்தோடு வட. மாகாண கல்வித்துறையில் இடம்பெறும் பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்கு விசாரணைக் குழுவொன்றினை உருவாக்குவதற்கும் நடவடிக்கை எடுத்துவருவதாகவும் தெரிவித்துள்ளார்.
