மாபெரும் இரத்தான முகாம் மட்-மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினரால் நடாத்தப்படவுள்ளது.
மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லுரி பழையமாணவர் சங்கத்தினால் நாளை ஞாயிற்றுக்கிழமை (23.06.2019) காலை 9.00 மணிக்கு மாபெரும் இரத்தான நிகழ்வு மட்டக்களப்பு மெதடிஸ்த மத்தியகல்லூரியில் நடாத்தப்படவுள்ளது. இற நிகழ்வானது மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழையமாணவர் சங்கத்தினரால் ஆறாவது வருடமாக நடாத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
'உதிரம் கொடுப்போம் உயிர்காப்போம்' எனும் தொனிப் பொருளிற்கு இணங்க சகல இளம் சமூகத்தினரும் இத்தகைய அளப்பெரிய தானமாகிய இரத்ததானத்தில் பங்கு கொள்ளும்படியும் உயிர்காக்கும் உன்னதமான ஒருசேவையினை நPங்களும் வழங்கியவராக மனநிறைவடையும் வகையில் இப்பணிக்கு வலுச்சேர்ப்பவர்களாக மாறுங்கள்.
உலகில் சந்தையிலோ, கடைகளிலோ வாங்கமுடியாத உயிர்காக்கும் உதிரத்தினை வழங்கி நPங்களும் ஆரோக்கியவானாக வாழ்வதோடு மற்றவரை வாழவைக்கும் பெருமையை கொள்வீர்களாக.
