
உச்ச பயன்பாடு பெறப்படாத சொத்துக்களை நீக்கும் சட்டமூலம் 22 மேலதிக வாக்குகளால் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
குறித்த சட்டமூலதிற்கு ஆதரவாக 91 வாக்குகளும் எதிராக 69 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ள நிலையில் 22 மேலதிக வாக்குகளால் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கடந்த வாரம், இலங்கை சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர இரண்டு சீனி தொழிற்சாலைகள் தனியார்மயமாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகக் கூறி இந்தச் சட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்தார்.
அதுமட்டுமன்றி இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்ற வீதியை முற்றுகையிட்டு கரும்பு உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
