LATEST NEWS

Sri Lanka

Colombo booked.net
+25°C

Canada (Toronto)

Toronto booked.net
+C

USA (Newyork)

New York booked.net
+14°C

UK (London)

London booked.net
+12°C

Australia (Sydney)

Sydney booked.net
+13°C


















ஆன்மிகம்

பலதும் பத்தும்

Friday, June 21, 2019

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்கு பின் நெருக்கடிகள் அதிகரித்துள்ளது – தமிழ் அரசியல் கைதிகள்

தமது விடுதலை தொடர்பில் எவரும் அக்கறை காட்டவில்லை
என்றும் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்கு பின் நெருக்கடிகள் அதிகரித்துள்ளதாகவும் தமிழ் அரசியல் கைதிகள் சிவசக்தி ஆனந்தனிடம் தெரிவித்துள்ளனர்.

மகசின் சிறைச்சாலையில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளரும் வன்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் நேரில் சென்று பார்வையிட்டார்.

“தற்போது எமது விடுதலை குறித்து எவ்விதமான கவனத்தினையும் எடுப்பதாக இல்லை என்றும் பல்வேறு விடயங்களுக்கான தீர்வுகளை பெறுவதற்கான சந்தர்பங்கள் ஏற்பட்டபோதும் அவற்றை கைவிட்டதன் காரணத்தினால் எமது விடுதலை உள்ளிட்ட பல விடயங்கள் இன்று கிடப்பில் போடப்பட்டுள்ளன என்றும் ஆகவே இதற்குரிய பொறுப்பினை கூறவேண்டும்” என்றும் தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கை விடுத்தனர் என சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

மேலும் சிறைக்கூடத்தில் குடிநீர் வசதியைப் பெற்றுக்கொள்வதில் உள்ள பிரச்சினைகள், முன்னர் பயன்படுத்திவந்த மைதானத்திற்குள் பிரவேசிப்பதற்கும், சுற்றுப்புறங்களில் நேரங்களை கழிப்பதற்குமான அனுமதிகள் மறுக்கப்பட்டமை தொடர்பாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியதாக சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

சுமார் ஒருமணி நேரத்திற்கும் அதிகமாக தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்டதுடன் தன்னாலான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக உறுதியளித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “மகசின் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் 95 பேர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் இருவருக்கு ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் வழக்குகள் கடந்த காலங்களில் ஆமை வேகத்திலேயே முன்னெடுக்கப்பட்டு வந்திருந்தன. அவர்களுக்கு எதிரான வழக்குகளை விரைந்து நடத்துவதில் பெரும் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில், எனது சக்திக்கு உட்பட்ட வகையில் இவ்விடயத்தில் செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளேன்” என தான் சுட்டிக்காட்டியதாக சிவசக்தி ஆனந்தன் கூறினார்.

 
Copyright © 2018 தட்டுங்கள்
Powered by WordPress24x7