தாக்குதல்கள் இடம்பெற்ற தென்னிலங்கைமற்றும் கிழக்கைப் பார்க்கிலும் வடக்கிலேயே தற்போதும் அதிகமான சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.ஸ்ரீதரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அத்தோடு தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகாலச் சட்டமும் தமிழர்களுக்கான அச்சுறுத்தலாகவே காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கிளிநொச்சி, இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துதெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் தெரிவித்த அவர், “கடந்த ஏப்ரல் மாதம் தென்னிலங்கையிலும் இடம்பெற்ற தாககுதல்கள் காரணமாக ஸ்தம்பிதம் அடைந்த இலங்கை தற்போது ஓரளவு சுமுகமான நிலைக்கு வந்துள்ளது. எனினும் பாதுகாப்பு இதுவரையில் உறுதிப்படுத்தப்டவில்லை.
இந்நிலையில், தாக்குதல்கள் நடத்தப்பட்ட கிழக்கு மாகாணத்திலும் தென்னிலங்கையிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை. ஆனால் வடக்கிலேயே அதிகமாக பாதுகாப்பு நட்வடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
எனவே இந்த நாட்டில் தமிழர்களுக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும். உரிமைகள் மறுக்கப்படாது நீதியான முறையில் வாழும் நிலை உருவாக வேண்டும்” என மேலும் தெரிவித்துள்ளார்.





