
ஹொங் கொங் தற்போது வழமை நிலைக்கு திரும்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹொங் கொங்கில் முக்கிய வழக்குகளில் கைது செய்யப்படுபவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணைகளை முன்னெடுக்கும் வகையில் கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டு வர ஹொங் கொங் நிர்வாகம் தீர்மானித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து குறித்த உத்தேச கைதிகள் பரிமாற்ற சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹொங் கொங்கில் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தற்போது குறித்த சர்ச்சைக்குரிய சட்டமூலத்தை கைவிடுவதற்கு ஹொங் கொங் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தநிலையிலேயே போராட்டங்கள் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த ஹொங் கொங் தற்போது வழமை நிலைக்கு திரும்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, நாளைய தினம் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
