
இயங்குதளமான Hongmeng காப்புரிமையை பெற உலகின் ஒன்பது நாடுகளில் விண்ணப்பித்துள்ளது.
இதன் காரணமாக Huawei நிறுவனம் தனக்கென சொந்தமாக Hongmeng எனும் இயங்குதளத்தை உருவாக்கி அதனை பயன்படுத்த கம்போடியா, கனடா, தென் கொரியா, நியூசிலாந்து மற்றும் ஐ.நா.வின் சர்வதேச காப்புரிமை அலுவலகங்களில் காப்புரிமை கோரி விண்ணப்பித்துள்ளது.
Huawei தனது புதிய இயங்குதளத்தை சீனாவில் Hongmeng என்ற பெயரிலும், சர்வதேச சந்தையில் Arc OS என்ற பெயரில் அறிமுகம் செய்யலாம் என கூறப்பட்டது. இதற்கான விண்ணப்பங்களை Huawei நிறுவனம் கடந்த மாதம் 27 ஆம் தகிதி சமர்பித்துள்ளது.
அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் Huawei உடன் வியாபாரம் செய்யக்கூடாது என ட்ரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டதை தொடர்ந்து Huawei ஸ்மார்ட் தொலைபேசிகளில் Android இயங்குதளத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அமெரிக்கா தொடர்ந்தும் வர்த்தக தடையை ஏற்படுத்தும் பட்சத்தில் இவற்றை பயன்படுத்த மாற்று இயங்குதளம் ஒன்றை Huawei உருவாக்கி வைத்திருப்பதாக Huawei நிறுவன நுகர்வோர் பிரிவு தலைமை செயல் அதிகாரி Mr. Yu Chengdong (Richard Yu) தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஸ்மார்ட் தொலைபேசி சந்தையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் Huawei தனது மொபைல் இயங்குதளம் பற்றி அதிகளவு விபரங்களை வழங்கவில்லை. அதேநேரம் காப்புரிமை விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கும் தகவல்களில் Hongmeng இயங்குதளத்தை ஸ்மார்ட் தொலைபேசி, Portable Computers, Robots மற்றும் Car TV இல் பயன்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளது.
