ந்தெடுக்கப்பட்டுள்ள சோனியா காந்திக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தி.மு.க.வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே மு.க.ஸ்டாலின் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சோனியா காந்திக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இதய பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பன்முகத்தன்மை, மதச்சார்பின்மை, சமூக நீதி, ஏழை மக்களின் நம்பிக்கைக்கு உத்தரவாதமாக காங்கிரஸ் திகழ்கிறது. ஆகையால் இந்த கட்சியின் பணியை மக்களின் இதயங்களை விட்டு நீக்க முடியாது” என மு.க.ஸ்டாலின் குறித்த வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான குழு கூட்டம் நேற்று டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
இதன்போது காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவராக சோனியா காந்தியை, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் முன்மொழிய, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதனை வழி மொழிந்தனர்.
அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவராக சோனியாகாந்தி ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையிலேயே மு.க.ஸ்டாலின் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






