மக்களுக்கான என் சேவை தொடருமென தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்தரராஜன் குறிப்பிட்டுள்ளார்.
தூத்துக்குடி, குலசேகரப்பட்டினம் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட மருத்துவ முகாமை தொடர்ந்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த தமிழிசை செளந்தரராஜன் இவ்வாறு கூறியுள்ளார்
மேலும் ஆட்சிக்கு வருபவர்கள்தான் மக்களுக்கு சேவை செய்ய முடியும். எதிர்க்கட்சியில் இருப்போர் கோரிக்கைகள் மட்டுமே வைக்க முடியுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழகத்தினை நாம் புறக்கணிக்கவில்லை. கோதாவாரி- காவிரி இணைப்பு திட்டம் ஏறக்குறைய 65 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் முன்னெடுக்கப்பட இருக்கின்றதெனவும் தமிழிசை செளந்தரராஜன் குறிப்பிட்டுள்ளார்.
அந்தவகையில் பா.ஜ.க.ஆட்சியில் தமிழரின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுகொடுக்கப்படும். 100 நாட்களுக்குள் மக்களுக்கு வேண்டிய அத்தியாவசிய திட்டங்கள் பலற்றை கொண்டுவருவதாக பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இவ்வாறு மோடியின் தொலைநோக்கு திட்டம், மக்களுக்கு சிறந்த பயனை தருமென எதிர்பார்ப்பதுடன் நேர்- மறையான அரசியலையே பா.ஜ.க முன்னெடுக்க தீர்மானித்துள்ளதெனவும் தமிழிசை குறிப்பிட்டுள்ளார்.






