கவும் மத்திய அரசு முன்னின்று உழைக்கும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, அவர் டுவிட்டரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள பதிவிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் தெரிவிக்கையில், “மக்கள் கருத்துக்களைக் கேட்டறிந்த பின்பே கல்விக் குழுவின் வரைவு அறிக்கை அமுல்படுத்தப்படும். பிரதமர் மோடி, அனைத்து இந்திய மொழிகளையும் வளர்க்க விரும்பியே ‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்ற முயற்சியை ஆரம்பித்தார்.
இதேவேளை, தொன்மையான தமிழைப் போற்றி வளர்ப்பதற்கும் மத்திய அரசு முன்னின்று ஆதரிக்கும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அரசுக்கு கஸ்தூரி ரங்கன் குழு தற்போது புதிய கல்விக் கொள்கையை பரிந்துரைத்துள்ளது. அதில் அனைத்து மாநிலங்களும் தாய்மொழி, ஆங்கிலம் ஆகியவற்றுடன் ஹிந்தி மொழியை கட்டாயம் படிக்கவேண்டும் என பரிந்துரைத்துள்ளது. இந்தப் பரிந்துரை இணையத்தளத்தில் வெளியிடப்பட்டு, பொதுமக்களிடம் கருத்துகள் கேட்கப்படுகின்றன.
இதனிடையே, ஹிந்தி பேசாத மாநிலங்களில் இந்த கல்விக் கொள்கைக்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.






