எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
மும்மொழித் திட்டம் தொடர்பாக அவர் இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் கூறுகையில், “மக்களின் கருத்துகளை கேட்டறிந்த பிறகே புதிய கல்வி குழுவின் வரைவை மத்திய அரசு முன்னெடுத்து செல்லும்.
அரசு அனைத்து இந்திய மொழிகளையும் வளர்க்கவும், ஊக்குவிக்கவும் எல்லா முயற்சியையும் எடுக்கும். எந்த மொழியையும் திணிக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அரசுக்கு கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரைத்த புதிய கல்விக் கொள்கையில், அனைத்து மாநிலங்களும் தாய்மொழி, ஆங்கிலம் ஆகியவற்றுடன் இந்தி மொழியை கட்டாயம் படிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. இது இணையத்தில் வெளியிடப்பட்டு பொதுமக்களிடம் கருத்துகள் கேட்கப்படுகின்றன.
தமிழகம் உட்பட ஹிந்தி பேசாத மாநிலங்களில் இந்த கல்விக் கொள்கைக்கு கடும் எதிர்ப்பலைகள் உருவாகியுள்ளன. இந்த சூழலில் மொழித் திணிப்பு இடம்பெறாது என மத்திய அரசுசார் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






