(பி.எம்.எம்.ஏ.காதர்)
மருதமுனை பொது நூலக வீதி காபட் வீதியாக நிர்மானிக்கும் பணிகள் இன்று(16-06-2019)ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவரும்.முன்னாள் இராஜாங்க அமைச்சருமான நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இந்த வேலைத்திட்டத்தை ஆரம்பித்தார்;.
நீண்ட காலமாக கவனிப்பாரற்றுக் கிடந்த இந்த வீதி நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் வேண்டுகோளின் பேரில் நெடுங்சாலைகள் வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் ரண் மாவத் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஒரு கோடியே ஐம்பது இலட்சம் ரூபா நிதியில் காபட் வீதியா இந்த வீதி நிர்மானிக்கப்படவுள்ளது.
இந்த நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள், பள்ளிவாசல்களின் தலைவர்கள்,அதிபர்கள்,உள்ளீட்ட ஊர்பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
