
ளுமன்றத் தெரிவுக்குழுவின் விசாரணைகளின் மூலமாக பாதுகாப்புத்துறை காட்டிக்கொடுக்கப்படுவதாக விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) நடந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
“பாதுகாப்புதுறை மற்றும் புலனாய்வு துறைசார் தகவல்களையும் அதிகாரிகளையும் பாதுகாப்பது அவசியமானதாகும்.
புலனாய்வுத் தகவல்களையோ அல்லது சம்பந்தப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளின் தகவ்லகளையோ கசியவிடப்பட்டால் அது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கும் மக்களுக்கும் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும்.
இதேவேளை கட்டாய விடுமுறையில் உள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, ஏப்ரல் 21 தாக்குதலுக்கான பொறுப்புக் கூற வேண்டிய கடமையில் இருந்து விலகி இருக்க முடியாது
இந்த தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க இயலாது இருப்பதாகவும்” அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
