
ற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணைகளை நாளை இடம்பெறவுள்ளது.
இதன்போது அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா மற்றும் காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் சாட்சியமளிக்கவுள்ளனர்.
அத்தோடு தனது பதவியை இராஜினாமா செய்துள்ள மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலியும் நாளைய சாட்சியமளிப்பதற்காக அழைக்கப்பட்டுள்ளார்.
இதுவரை பாதுகாப்பு செயலாளர் சாந்த கோட்டேகொட தேசிய புலனாய்வு பிரிவின் தலைமை அதிகாரி டி.ஐ.ஜி. சிசிர மெண்டிஸ் மற்றும் நாலக டி சில்வா, பூஜித் ஜயசுந்தர ஆகியோரிடம் சாட்சியம் பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
