
கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பினரின் (லண்டன்) நிதிப்பங்களிப்புடன் கிளிநொச்சி மருதநகர் பன்னங்கண்டி ஆகிய இரு கிராமங்களில் மாலைநேரக்கற்றல் நிலையங்கள் நடாத்தப்பட்டு வருகிறது.இங்கு கல்விகற்று வரும் கற்றல் இடர்பாடுள்ள வறியமாணவர்களுக்கு கடந்த சனிக்கிழமை மாலை ஐந்து மணிக்கு சேர்.பொன்இராமநாதன் முன்பள்ளி வளாகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.24 மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டது.நிலையத்தின் பொறுப்பாசிரியர் அருணாசலம் சத்தியானந்தன் தலைமையில் நடைபெற்ற
இந்நிகழ்வில் யாழ்.போதனாவைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியக்கலாநிதி சத்தியமூர்த்தி அவர்களும் kili people அமைப்பின் தலைவர் வைத்தியக்கலாநிதி சதானந்தன் ,விஜியன் ரமேஸ்.உட்பட ஓய்வு நிலைஅதிபர் நா.சோதிநாதன் ஆசிரிய ஆலோசகர் சிவரூபன் வைதியக்கலாநிதி மா.குகராஜா திரு.கௌரிபாலா.மருதநகர் கிராமசேவையாளர் திரு.இந்திரன்..மற்றும் பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டுசிறப்பித்திருந்தனர்