
அத்தோடு, மறுகட்டமைப்பு செய்து புதுப்பிக்கப்பட்டுள்ள தங்கள் இராணுவம் எப்போதும் தாக்குதலுக்கு தயாராகவே உள்ளதென்றும் அவர் ஈரானை எச்சரித்துள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை சந்திப்பதற்காக ஜெருசலேம் நகருக்குச் சென்றுள்ள அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஈரான் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தாக்குதல் நடத்த உத்தரவிட்டு, அதனை இறுதி நிமிடத்தில் கைவிட்டதாக அண்மையில் வெளிவந்த செய்தி, இரு நாடுகளிடையே போர் பதற்றத்தை அதிகரித்திருந்தது.
இதனையடுத்து தங்கள் நாட்டின் மீது ஒரு தோட்டா பாய்ந்தால் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகளுக்கு சொந்தமான உடைமைகள் தீக்கிரையாகும் என ஈரான் நாட்டின் இராணுவ தளபதியின் செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் அபோல்பஸல் ஷேகர்ச்சி நேற்று எச்சரித்திருந்தார்.
இந்நிலையில், இதற்கு பதில் வழங்கும் முகமாகவே, தாக்குதலை தள்ளிப் போட்டதால் தங்கள் விவேகத்தை தவறுதலாக பலவீனமாக மதிப்பிட வேண்டாம் என அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் பால்ட்டன் தெரிவித்துள்ளார்.
