
அபிய் அஹமத் தலைமையிலான ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் எத்தியோப்பிய பிரதமர், தலைமையிலான அரசுக்கு எதிராக நேற்று (சனிக்கிழமை) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது பல வன்முறைச் சம்பவங்கள் பதிவாகின. இதைனையடுத்து சிலமணி நேரத்தில் எத்தியோப்பியா நாட்டின் இராணுவ தளபதி மேகொன்னேன், அவரது வீட்டில் மெய்காப்பாளரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். அதேபோல அம்ஹாரா மாகாண ஆளுநரும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தை தொடர்ந்து அம்ஹாரா பகுதியில் இணையதள சேவை முற்றிலும் முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தாக்குதலுக்கு முன்னாள் இராணுவ தளபதியே காரணம் என ஆளும்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
எத்தியோப்பியா நாட்டின் பிரதமராக அபிய் அஹமத் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் பதவியேற்றார். இதனையடுத்து அங்குள்ள அம்ஹாரா உள்ளிட்ட சில பகுதிகளில் இன வன்முறை அதிகரித்தது. இதன் எதிரொலியாகவே நேற்றைய போராட்டம் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
