
அத்தோடு, தீவிர வலதுசாரிகளை எந்தவித தயவுதாட்ண்னியமும் இன்றி முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
டார்ட்மண்டில் இடம்பெற்ற லூதரன் புராடெஸ்டண்ட் கூட்டம் ஒன்றில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
உலகிலேயே வெளிப்படையாக அகதிகளை வரவேற்ற முதல் அதிபராக அங்கெலா மேர்கல் உள்ளார். அகதிகள் தொடர்பான விவகாரங்களை கையாள்வதற்கு அங்கெலா மேர்கலுக்கு உறுதுணையாக இருந்த வால்ட்டர் லியூப்கே (வயது – 65) என்பவர் அவரது வீட்டில் வைத்து கடந்த ஜீன் 2 ஆம் திகதி சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.
இந்நிலையில் ஒரு வாரத்திற்கு முன்னர் இந்தக் கொலை தொடர்பாக 45 வயதுடைய ஜேர்மன் பிரஜையான ஸ்டீபன் எர்னஸ்ட் என்பவரை பொலிஸார் கைது செய்தனர்.
எர்ன்ஸ்ட் என்பவர் பொலிஸார் பார்வையில் ஒரு வலதுசாரி பயங்கரவாதி கருதப்பட்டு வருகின்றார். 1993இல் அகதி முகாமில் பைப் குண்டு வீசியது உட்பட, 1980ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை பல்வேறு தீவிரவாத சம்பவங்களில் இவர் மீது வழக்குகள் பதிவாகியுள்ளன.
இதேவேளை, ஜேர்மன் உள்துறை அமைச்சர் ஹர்ஸ்ட் சீஹோபரும் வலதுசாரிகளினால் மேற்கொள்ளப்படுகின்ற குற்றச்செயல்களை ‘ரியல் டேஞ்சர்’ என வர்ணித்ததோடு, இது ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
அகதிகளுக்கு எதிரான சிந்தனையுடைய வலதுசாரிகளினால் யாரெல்லாம் அச்சுறுத்தப்படுகின்றனரோ அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் நம் கடமையிலிருந்து தவறக்கூடாது என்றும் ஜேர்மன் உள்துறை அமைச்சர்தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
