
ஜ.எஸ். பயங்கரவாதிகளினால் நிலத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 300 ஜெலக்நைட் குச்சிகளும், 1000 டெட்டர்நேட்டர்களும் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த வெடிபொருட்களை இன்று (வியாழக்கிழமை) மாலை சி.ஜ.டி.யினர் மீட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
காத்தான்குடியில் தேசிய தௌஹீத் ஜமாத்தின் ஆயுதப்பிரிவு தலைவர் மொஹமட் மிலான் என்ற பயங்கரவாதி வழங்கிய தகவலுக்கு அமைவாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
40 வயதான குறித்த நபர் சவுதியில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்துவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
