
நிறைவேற்றப்பட்டுள்ளது.
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் அவசரகால நிலைமையை மீண்டும் ஒரு மாதத்திற்கு நீடிப்பது தொடர்பான விவாதம் நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்றது.
இதன்போதே அவசரகால சட்டத்தை மேலும் நீடிப்பதற்கான பிரேரணை வாக்கெடுப்பின்றி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
அவசரகால நிலைமையை மேலும் ஒரு மாத்த்திற்கு நீடிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை கடந்த 22 ஆம் திகதி ஜனாதிபதி வெளியிட்டிருந்தார்.
ஈஸ்டர் ஞாயிறு அன்று நாட்டின் சில இடங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து ஏப்ரல் 22 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டது.
இதன் பின்னர் மே 22 இல் முதல் தடவையாகவும் ஜூன் 22 இல் இரண்டாம் தடவையாகவும் இரு தடவைகள் அவசரகால சட்டம் நீடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
