பட்டால் மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படுமென தமிழ்நாட்டு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
புதிய கல்வி கொள்கையின் வரைவு அறிக்கை குறித்து இன்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே கே.எஸ்.அழகிரி இதனை குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
”தமிழகம், இந்திமொழி திணிப்புக்கு எதிராக நீண்டகாலமாக குரல் கொடுத்து வருகின்றது. அந்தவகையில் இந்தி பேசாத தமிழக மக்களுக்கு நேரு வழங்கிய உறுதிமொழியை தொடர்ந்து காப்பாற்ற வேண்டும்.
ஆனால் நேரு வழங்கிய உறுதிமொழியை மீறி புதிய கல்விக் கொள்கை என்ற போர்வையில் மும்மொழி திட்டத்தை புகுத்தி இந்தி மொழியை கட்டாயப்படுத்த மத்திய அரசு முயலுகின்றது.
இவ்வாறு மக்கள் விரும்பாத குறித்த மும்மொழி திட்டத்தை நடைமுறைப்படுத்த மத்திய அரசு முயன்றால் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்படும்” என கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.






